Production: Sun Pictures
Cast: Keerthy Suresh, Radha Ravi, Varalakshmi Sarathkumar, Vijay, Yogi Babu
Direction: AR Murugadoss
Screenplay: AR Murugadoss
Story: AR Murugadoss
Music: AR Rahman
Background score: AR Rahman
Cinematography: Girish Gangadharan
Editing: A Sreekar Prasad
Art direction: T Santhanam
மிகப்பெரிய பன்னாட்டு கம்பெனியின் சி.ஈ.ஓ-வாக இருக்கும் விஜய், தனது வாக்கினை செலுத்துவதற்காக இந்தியா வருகிறார். ஆனால் அவருக்கு முன்னரே அவரின் ஓட்டினை போட்டு விடுகிறார்கள். இதனைத்தொடர்ந்து தனது வாக்கினை செலுத்த விஜய் போராடுவதும், அதற்காக அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுமே 'சர்கார்'.
டயலாக், டான்ஸ், வசனம் என எல்லா ஏரியாவிலும் விஜய் வழக்கம்போல புகுந்து விளையாடி இருக்கிறார். பழ.கருப்பையா, ராதாரவி, வரலட்சுமி மூவரும் தங்களது கதாபாத்திரத்தை எந்தக் குறையுமின்றி சிறப்பாக செய்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் வரும் காட்சிகள் மனதில் ஒட்டவில்லை.சர்கார் என்ற பெயருக்கேற்றவாறு அரசியல், நாட்டு நடப்புகளை படத்தில் காட்சிகளாக இயக்குநர் முருகதாஸ் வைத்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சிம்டாங்காரன், ஒரு விரல் புரட்சி இரண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ரகம்.பிரமாண்டம், சண்டைக்காட்சிகள் என அனைத்திற்கும் தேவையான ஒளிப்பதிவினை கிரிஷ் கங்காதரன் சிறப்பாக அளித்திருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் படத்துக்கு பக்கபலமாக இருந்தாலும், இன்னும் சில காட்சிகளுக்கு அவரும்,இயக்குநரும் ஸ்ட்ரிக்ட்டாக கத்திரி போட்டிருக்கலாம் என தோன்றுகிறது. ராம்-லட்சுமணனின் கோரியோகிராஃபியில் சண்டைக்காட்சிகள் சிறப்பு.
டான்ஸ், நடனம், ஸ்டைல், சண்டை என தனது ரசிகர்களுக்கு வெரைட்டி கொடுக்க விஜய் தவறவில்லை. காதல் நாயகன், ஆக்ஷன் நாயகனிலிருந்து அரசியல் நாயகனாக விஜய் இப்படத்தின் வழியாக ப்ரோமோஷன் பெற்றிருக்கிறார்.
RATING - 8.4/10 || 163 min
0 comments :